ADDED : ஆக 05, 2026 10:25 PM
அ நிறம் | அளவு
அவலுார்பேட்டை: தகர ஷீட் விழுந்து படுகாயமடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
திருவண்ணாமலையை சேர்ந்த ஆறுமுகம் மகன் செல்வராஜ், 69; இவர் தகர ஷீட் குடோன் அமைக்கும் பணியாளர்.
நேற்று முன்தினம் அவலுார்பேட்டை அடுத்த வடுகப்பூண்டி கிராமத்தில் சின்னதம்பியின் நிலத்தில் தகர குடோன் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
மாலை 4:30, மணிக்கு குடோனில் மேல் தகர ஷீட் அமைத்த போது , கீழே நின்றிருந்த செல்வராஜ் மீது தகர ஷீட்கள் விழுந்தன.
இதில் படுகாயமடைந்த செல்வராஜை திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்த அவரது மகன் தேவேந்திரன், 33 புகாரின் பேரில் அவலுார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
