நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த மதுரப்பாக்கம் காலனியை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன், 53; கூலித் தொழிலாளி. இவர் குடும்ப பிரச்னையால் கடந்த 23ம் தேதி வீட்டிலிருந்து சென்றவர் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 6:00 மணியளவில் அதே பகுதியில் வயல்வெளியில் உள்ள மரத்தில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. புகாரின் பேரில், விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

