ADDED : ஜூன் 26, 2026 03:30 PM
அ நிறம் | அளவு
விழுப்புரம்: விழுப்புரத்தில் வயிற்று வலியால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
விழுப்புரம் சித்தேரிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் கேசவன் மகன் நாகமணி, 45; கூலித் தொழிலாளி. இவர், வயிற்று வலியால், நேற்று முன்தினம் தனது வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
