/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழா
/
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழா
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழா
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழா
ADDED : ஆக 07, 2024 05:42 AM

விழுப்புரம் : விழுப்புரம் அருகே கண்டமானடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், உலக தாய்ப்பால் வார விழா நடந்தது.
விழாவுக்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பிரியாபத்மாசினி தலைமை வகித்தார். பொது சுகாதார நிபுணர் டாக்டர் நிஷாந்த் முன்னிலை வகித்தார். டாக்டர்கள் பானுஸ்ரீ, தேவிபிரியா, தீனா, செவிலியர் கண்காணிப்பாளர் ஷைமலா, செவிலியர் பாவனா, உதயா, தேவசேனா, சுகாதார ஆய்வாளர் பிருதிவி, மருத்துவமனை பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
விழாவில், கர்ப்பிணிகளின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான ஊட்டச்சத்து பொருட்கள், ஸ்டால்களில் காட்சிப்படுத்தப்பட்டது. கண்டமானடி கிராம அங்கன்வாடி பணியாளர்கள், குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் கண்காட்சி அரங்குகளை அமைத்தனர்.
தாய்ப்பாலின் முக்கியத்துவம், அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பங்கேற்றவர்களுக்கு, ஆரோக்கியமான சிற்றுண்டி வழங்கப்பட்டது. தாய்ப்பால் அளிப்பதற்கு தனி அறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திறக்கப்பட்டது.