/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழா
/
ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழா
ADDED : ஆக 07, 2024 07:48 AM

திண்டிவனம் : திண்டிவனம் அடுத்த தாதாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழா நடந்தது.
தாதாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துடன் திண்டிவனம் நண்பர்கள் லயன்ஸ் குடும்பம் இணைந்து நடத்திய உலக தாய்ப்பால் வார விழாவிற்கு, சங்கத் தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார்.
மாவட்டத் தலைவர் பால்பாண்டியன்ரமேஷ் முன்னிலை வகித்தார். மருத்துவர் மோனிகா தாய்ப்பாலின் அவசியம் குறித்து பேசினார்.
இதில் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆசிரியர் துரை, செயலாளர்கள் சரவணன், செந்தில்குமார், ஆசிரியர் சுஜிதா சைமன் துரைசிங் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள 30 தாய்மார்களுக்கு ஹார்லிக்ஸ், பிரட் பாக்கெட் மற்றும் பழவகைகள் கொண்ட தொகுப்பு வழங்கப்பட்டது.