/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
உலக பட்டினி தினம் த.வெ.க., அன்னதானம்
/
உலக பட்டினி தினம் த.வெ.க., அன்னதானம்
ADDED : ஜூன் 01, 2024 06:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : உலக பட்டினி தினத்தையொட்டி, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விக்கிரவாண்டியில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிநடந்தது.
தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்து, மாவட்ட பொறுப்பாளர் பரணி பாலாஜி, தலைவர் மோகன் ஆகியோர் ஆலோசனையின் பேரில், விக்கிரவாண்டி பஸ் நிலையத்தில்300 பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட துணைத் தலைவர் வடிவேல் தலைமை தாங்கி, அன்னதானம் வழங்கினார். ஒன்றிய தலைவர் சேகர், செயலாளர் காமராஜ், பொருளாளர் ரமேஷ் என்கிற சக்திவேல், நிர்வாகிகள் பாரதி, கார்த்தி, உலகநாதன், நவீன்ராஜ், தனஞ்செழியன், மணிராஜன், பிரகாஷ், வசந்த், புருஷோத் உட்பட பலர் பங்கேற்றனர்.