/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
உலக அளவிலான கராத்தே போட்டி; விழுப்புரம் மாணவர்கள் பங்கேற்பு
/
உலக அளவிலான கராத்தே போட்டி; விழுப்புரம் மாணவர்கள் பங்கேற்பு
உலக அளவிலான கராத்தே போட்டி; விழுப்புரம் மாணவர்கள் பங்கேற்பு
உலக அளவிலான கராத்தே போட்டி; விழுப்புரம் மாணவர்கள் பங்கேற்பு
ADDED : மே 08, 2024 11:50 PM

விழுப்புரம் : மலேசியாவில் நடக்கும் உலக கராத்தே போட்டியில், இந்தியா சார்பில் விழுப்புரம் கராத்தே மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
உலக அளவிலான 20ம் ஆண்டு, ஒகினாவா கோஜூரியோ கராத்தே போட்டிகள்-2024, மலேசியா நாட்டில் நடக்கிறது. அங்குள்ள பேராக் மாகாணம் ஈபோ சிட்டியில், நாளை 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.
போட்டியில், 15 நாடுகளைச் சேர்ந்த 2,000 பேர் வரை பங்கேற்கின்றனர். இதில், அகில இந்திய அணி சார்பில் 150 பேரும், தமிழகத்தில் இருந்து 50 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதில், அகில இந்திய அளவில் கராத்தே போட்டியில் பங்கேற்க தேர்வான, விழுப்புரம் வி.ஆர்.பி., மேல்நிலைப் பள்ளியில் இயங்கும் ஆல் இந்தியா புஷி சிட்டோரியோ கராத்தே பயிற்சி பள்ளி மாணவர்கள் சுபிக் ஷா, சுமிக் ஷா மற்றும் பிரனவ்குமரன் ஆகியோர், கராத்தே அணியின் பயிற்சியாளர் ரென்ஷி சுரேஷ் தலைமையில் பங்கேற்கின்றனர்.
இவர்களில் 2 பேர், 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில், கட்டா குமிதே போட்டியிலும், ஒருவர் 12 வயதுக்குட்பட்டோர் பிரிவில், கட்டா குமிதே போட்டியிலும் பங்கேற்க உள்ளனர்.
விழுப்புரத்திலிருந்து நேற்று மாலை புறப்பட்ட இந்த கராத்தே வீரர்களை, வி.ஆர்.பி., பள்ளி தாளாளர் சோழன் வாழ்த்தி வழியனுப்பினார்.