/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
'மீண்டும் மஞ்சள் பை' விழிப்புணர்வு பிரசாரம்
/
'மீண்டும் மஞ்சள் பை' விழிப்புணர்வு பிரசாரம்
ADDED : ஜூலை 06, 2024 05:27 AM

விழுப்புரம்: பூத்தமேடு அரசு பள்ளியில் மீண்டும் மஞ்சள் பை விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
பள்ளி கல்வித் துறையின் சுற்றுச்சூழல் மன்றம் மற்றும் ஜே.ஆர்.சி., அமைப்பு சார்பில், உலக பிளாஸ்டிக் தவிர்ப்பு தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமையாசிரியர் முருகேசன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் நாகமுத்து, ஜூனியர் ரெட்கிராஸ் மாவட்ட கன்வீனர் பாபு செல்வதுரை ஆகியோர், பிளாஸ்டிக் தவிர்ப்பு குறித்து கருத்துரையாற்றினர்.
நிகழ்ச்சியில் அனைவருக்கும் மஞ்சள் பை வழங்கப்பட்டது. தொடர்ந்து, மாணவர்கள் சார்பில், அந்த பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் தவிர்ப்பதற்கான துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் செல்வக்குமார் நன்றி கூறினார்.