sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பெண்ணை தாக்கிய வாலிபர் கைது

/

பெண்ணை தாக்கிய வாலிபர் கைது

பெண்ணை தாக்கிய வாலிபர் கைது

பெண்ணை தாக்கிய வாலிபர் கைது


ADDED : மே 05, 2024 05:59 AM

Google News

ADDED : மே 05, 2024 05:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம், : விழுப்புரத்தில் காரில் வந்த பெண்ணையும், அவரின் பிள்ளைகளை தாக்கிய வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் கே.வி.ஆர்., நகரை சேர்ந்தவர் குமாரவேல் மனைவி தேவகி,54; இவரும், இவரின் மகன் சித்தார்த்தன்,33; மகள் யாழினி,24; ஆகியோர் கடந்த 29ம் தேதி காரில் புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்தனர்.

இவர்களின் முன்னால் இரு மோட்டார் சைக்கிள்களில் விழுப்புரம் நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்த பரமசிவம் மகன் சஞ்சய்,20; ஸ்ரீதேவி, நவீன், விமல் ஆகியோர் கரும்பு சக்கையை தின்று வீசியபடி சென்றனர். விழுப்புரத்தில் உள்ள புதுச்சேரி சாலையில் வந்த போது, காரை நிறுத்தி, மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்களிடம் கரும்பு சக்கையை வீசியது பற்றி தேவகி மற்றும் பிள்ளைகள் கேட்டுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த சஞ்சய் உட்பட 4 பேரும் சேர்ந்து, தேவகி மற்றும் அவரின் பிள்ளைகளை திட்டி, தாக்கியுள்ளனர். விழுப்புரம் டவுன் போலீசார் 4 பேர் மீதும் வழக்குப் பதிந்து, சஞ்சயை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us