/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சொத்து தகராறில் வாலிபர் கொலை மரக்காணம் அருகே பரபரப்பு
/
சொத்து தகராறில் வாலிபர் கொலை மரக்காணம் அருகே பரபரப்பு
சொத்து தகராறில் வாலிபர் கொலை மரக்காணம் அருகே பரபரப்பு
சொத்து தகராறில் வாலிபர் கொலை மரக்காணம் அருகே பரபரப்பு
ADDED : ஆக 22, 2024 02:03 AM
மரக்காணம் : சொத்து பிரச்னையில், உறவினரை அடித்து கொலை செய்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.
திண்டிவனம் அடுத்த காவலுார் கிராமத்தில் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜாராம் மகன் சரவணன்,24; கூலி தொழிலாளி. அதே கிராமத்தை சேர்ந்தவர் இவரது அத்தை மகன் கிருஷ்ணமூர்த்தி மகன் சீனிவாசன்,25; இவர்களுக்குள் சொத்து பிரச்னை உள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு 7.00 மணிக்கு மீண்டும் சொத்து பிரச்னை காரணமாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சீனுவாசன், சரவணன் மூக்கில் சரமாரியாக தாக்கினர்.
இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த சரவணனுக்கு வலிப்பு ஏற்பட்டு மயங்கினார். உடன் அருகில் இருந்தவர் அவரை மீட்டு, திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தார்.
இதுகுறித்து பிரம்மதேசம் போலீசார் வழக்கு பதிந்து சீனிவாசனை தேடி வருகின்றனர். இச்சம்பவம் காவலுார் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.