/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆதிவாலீஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்
/
ஆதிவாலீஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்
ADDED : டிச 10, 2024 07:05 AM

விழுப்புரம்: விழுப்புரம் ஆதிவாலீஸ்வரர் கோவிலில் சோமவாரத்தையொட்டி 1008 சங்காபிஷேகம் நடந்தது.
அதனையொட்டி, கோவிலில் உள்ள மூலவருக்கு நேற்று மாலை 4:00 மணிக்கு மேல் 1008 சங்குகளால் சங்காபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து, ஆதிவாலீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 5:00 மணிக்கு தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, ஆலய நிர்வாகி வெங்கடேசன் தலைமையில் அப்பகுதி மக்கள் செய்தனர்.
மயிலம்: ரெட்டணை ராஜ ராஜேஸ்வரி உடனுறை ராஜராஜேஸ்வரர் கோவிலில் நேற்று காலை 9:30 மணிக்கு 108 சங்க அபிஷேகம் நடந்தது. இதனைத் தொடர்ந்து மூலவருக்கு பால், சந்தனம் உள்ளிட்ட நறுமணப்பொருட்களினால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் நேற்று காலை 10:00 மணிக்கு ஞானாம்பிகை சமேத ராமநாதீஸ்வர்ர சுவாமிகள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து யாகசாலை பூஜையும், 1008 சங்காபிேஷகமும் நடந்தது.
மாலை கலசம் புறப்பாடும், ஞானாம்பிகை அம்மனுக்கு அபிஷேகமும் நடந் தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.