/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு மருத்துவமனையில் 100வது நாள் அன்னதானம்
/
அரசு மருத்துவமனையில் 100வது நாள் அன்னதானம்
ADDED : ஜூலை 03, 2025 08:17 AM

செஞ்சி: செஞ்சி அரசு மருத்துவமனையில் 100வது நாள் அன்னதான விழா நடந்தது.
சென்னை வேளச்சேரி மற்றும் செஞ்சி தேவதானம்பேட்டையில் உள்ள ஜோதி அறக்கட்டளை சார்பில் ஜோதிமாமலை நடமாடும் தருமச்சாலை நடத்தி வருகின்றனர்.
இந்த தருமச்சாலை சார்பில் செஞ்சி அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு அன்னதானம் செய்து வருகின்றனர். இதன் 100வது நாள் விழா நேற்று நடந்தது.
அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் சுவாமி சங்கரன் வரவேற்றார்.
தருமசாலை பொறுப்பாளர் சவுந்தர்ராஜன் முன்னிலை வகித்தார்.
சன்மார்க்க சங்க தலைவர் தணிகாசலம், சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் ஆகியோர் அன்னதானம் மற்றும் இனிப்பு வழங்குவதை துவக்கி வைத்தனர்.
நிர்வாகிகள் சம்பத், டாக்டர் சரவணன், ரங்கன், பழனி, சர்தார்சிங், ரமேஷ்பாபு, சினுவாசன், அப்பாஸ், ராஜி, ஏழுமலை, பேரூராட்சி கவுன்சிலர் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.