/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கடந்த ஆண்டில் 57 ஆயிரம் பேருக்கு 108 ஆம்புலன்ஸ் மருத்துவ சேவை
/
கடந்த ஆண்டில் 57 ஆயிரம் பேருக்கு 108 ஆம்புலன்ஸ் மருத்துவ சேவை
கடந்த ஆண்டில் 57 ஆயிரம் பேருக்கு 108 ஆம்புலன்ஸ் மருத்துவ சேவை
கடந்த ஆண்டில் 57 ஆயிரம் பேருக்கு 108 ஆம்புலன்ஸ் மருத்துவ சேவை
ADDED : ஜன 09, 2024 01:05 AM
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில், கடந்த 2023ம் ஆண் டில் 108 ஆம்புலன்ஸ் சேவையை 57 ஆயிரத்து 474 பேர் பயன்படுத்தியுள் ளனர்.
தமிழகத்தில், கடந்த 2008ம் ஆண்டு முதல் இல வச 108 அவசர சிகிச்சை உறுதி சேவை வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசுடன் இணைந்து 'இ.எம்.ஆர்.ஐ., கிரீன் ெஹல்த்' சர்வீஸ் நிறுவனம், 108 ஆம்புலன்ஸ் சேவையை நிர்வகித்து வருகிறது.
விழுப்புரம் மாவட்டம் முழுதும் 39 இடங்களில், 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தப்பட்டு, சேவை வழங்கப்படுகிறது.
கடந்த 2023ம் ஆண்டு, 57 ஆயிரத்து 474 பேருக்கு, 108 ஆம்புலன்ஸ் சேவை அளிக்கப்பட்டுள்ளது.
இதில் பிரசவத்திற்காக 12 ஆயிரத்து 101 பேர், பச்சிளம் குழந்தைகள் 576 பேர், குழந்தைகள் 550 பேர், சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டோர் 11 ஆயிரத்து 171 பேர், காய்ச்சல் பாதிப்பு காரணமாக 3,196 பேர், இருதய நோய் மற்றும் சுவாச பிரச்னை தொடர்பாக 5,900 பேர் மற்றும் இதர மருத்துவ சேவைகளுக்காக 14 ஆயிரத்து 284 பேரும், 108 ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தியுள்ளனர்.
இதேபோல், மாவட்டத்தில் 32 பேசிக் லைவ் சப்போர்ட் ஆம்புலன்ஸ்,4 அதி நவீன வெண்டிலேட்டர் வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ், பச்சிளம் குழந்தைகளுக்கான அதிநவீன வசதிகளும் கூடிய ஆம்புலன்ஸ், இரண்டு பைக் ஆம்புலன்ஸ் செயல்பட்டு வருகிறது. கடந்த 2022ம் ஆண்டில் 108 ஆம்புலன்ஸ் சேவையை 48 ஆயிரத்து 316 பேர் பயன்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.