/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
108 ஆம்புலன்ஸ் பணியாளர் வேலைவாய்ப்பு முகாம்
/
108 ஆம்புலன்ஸ் பணியாளர் வேலைவாய்ப்பு முகாம்
ADDED : செப் 05, 2025 07:56 AM
விழுப்புரம்; மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் பணியாளர் வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் இயங்கும் 108 ஆம்புலன்ஸில் பணிபுரிய மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணிக்கான வேலை வாய்ப்பு முகாம், நாளை மறுதினம் நடக்கிறது. அன்று காலை 9:00 மணிக்கு தொடங்கி மதியம் 2:00 மணி வரை, எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது.
விழுப்புரம் சிக்னல் அருகே உள்ள மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகத்தில் நடக்கும் தேர்வில் மருத்துவ உதவியாளர் பணிக்கு, 19 வயது முதல் 30 வயதுக்குட்பட்ட இருபாலரும் பங்கேற்கலாம்.
கல்வித்தகுதியாக, பி.எஸ்.சி. நர்சிங், ஜி.என்.எம், ஏ.என்.எம், டி.எம்.எல்.டி (பிளஸ் 2 படித்த பிறகு இரண்டு ஆண்டுகள் டி.எம்.எல்.டி. படித்திருக்க வேண்டும்) அல்லது லைஃப் சயின்ஸ், பி.எஸ்.சி., விலங்கியல், தாவரவியல், பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோ பயாலஜி, பயோடெக்னாலஜி படித்தவர்கள் கலந்துகொள்ளலாம். மாதம், 21 ஆயிரத்து 320 ரூபாய் ஊதியமாக வழங்கப்படும். அசல் சான்றிதழ் கட்டாயம் எடுத்து வர வேண்டும்.
ஓட்டுநர் பணிக்கு, வயது வரம்பு 24 வயது முதல் 34 வயதுடைய ஆண்கள் பங்கேற்கலாம். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம், 3 ஆண்டுகள் மற்றும் பேட்ச் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் ஒராண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும். மாதம், 21 ஆயிரத்து 120 ரூபாய் ஊதியமாக வழங்கப்படும்.
இந்த தகவலை விழுப்புரம் மாவட்ட 108 ஆம்புலன்ஸ் திட்ட மேலாளர் ராஜசேகர் தெரிவித்துள்ளார்.