ADDED : ஜன 02, 2026 04:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார்: திருவக்கரையில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு 108 பால்குட ஊர்வலம் நடந்தது.
வானுார் அடுத்த திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பால் குடம் ஊர்வலம் நடந்து வருகிறது. ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நேற்று 108 பால்குட ஊர்வலம் நடந்தது.
ஊர்வலம், வக்ரகாளியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து புறப்பட்டு மாட வீதி வழியாக பக்தர்கள் பால் குடங்களை சுமந்தபடி ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

