/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
த.வா.க., பிரமுகர் கொலை 11 பேர் போலீசில் சரண்
/
த.வா.க., பிரமுகர் கொலை 11 பேர் போலீசில் சரண்
ADDED : ஜூலை 07, 2025 03:26 AM

விழுப்புரம்: த.வா.க., பிரமுகர் கொலை வழக்கில் 11 பேர் போலீசில் சரணடைந்தனர்.
காரைக்கால், திருநள்ளாரை சேர்ந்தவர் மணிமாறன், 32; த.வா.க., மாவட்ட பொறுப்பாளர். இவர், இரு தினங்களுக்கு முன் கொலை செய்யப்பட்டார். செம்பனார்கோவில் போலீசார் வழக்கு பதிந்தனர். இதில், 2021 அக்., 22ல் பா.ம.க., காரைக்கால் மாவட்ட செயலராக இருந்த தேவமணி கொலை வழக்கில் மணிமாறன் முக்கிய குற்றவாளி என, தெரியவந்தது.
வழக்கு தொடர்பாக, புதுச்சேரி கூலிப்படையை சேர்ந்த ஏழு பேர் நேற்று விழுப்புரம் மாவட்டம், வளவனுார் போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தனர். அதேபோன்று, ஏற்கனவே கொலை செய்யப்பட்ட தேவமணியின் மகனும், பா.ம.க., காரைக்கால் மாவட்ட செயலருமான திருநள்ளாரைச் சேர்ந்த பிரபாகரன், 29, உட்பட, நான்கு பேர் மயிலாடுதுறை பாளையூர் போலீஸ் நிலையத்தில் நேற்று சரணடைந்தனர்.