ADDED : ஜூன் 10, 2025 10:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்; விழுப்புரம் மாவட்டத்தில் 11 சப் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
செஞ்சி சப் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்திற்கும், மரக்காணம் நடராஜன் செஞ்சிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
அதே போன்று, கிளியனுார் மாதவன் மரக்காணம், அங்கிருந்த திவாகர் கிளியனுார்,ஆரோவில் செந்தில்குமார் அனந்தபுரம், அவலுார்பேட்டை ஆனந்தன் ஆரோவில் காவல் நிலையத்திற்கும் மாற்றப்பட்டனர்.
மேலும், திண்டிவனம் கலால் சுந்தர்ராஜன் அவலுார்பேட்டை, மேல்மலையனுார் ராஜேந்திரன் திண்டிவனம் கலால் பிரிவு, மயிலம் வெங்கடேசன் மேல்மலையனுார், விழுப்புரம் மேற்கு விஜய் தாலுகா காவல் நிலையத்திற்கும், அங்கிருந்த காமராஜ் வளத்திக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை எஸ்.பி., சரவணன் பிறப்பித்துள்ளார்.