/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் இந்த ஆண்டு ரூ.112 கோடி செலவினம்
/
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் இந்த ஆண்டு ரூ.112 கோடி செலவினம்
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் இந்த ஆண்டு ரூ.112 கோடி செலவினம்
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் இந்த ஆண்டு ரூ.112 கோடி செலவினம்
ADDED : செப் 23, 2024 05:20 AM
விழுப்புரம், : தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்படி, விழுப்புரம் மாவட்டத்தில், 6 லட்சத்து 174 பேருக்கு வேலை அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 2024-25ம் ஆண்டிற்கான தின சம்பளம் 319 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளர்கள் ஊதியத்தை ஆதார் எண் அடிப்படையில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் 4 லட்சத்து 40 ஆயிரத்து 916 குடும்பத்தைச் சேர்ந்த 6 லட்சத்து 174 பேருக்கு தனிநபர் வேலை அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2023-24 ம் நிதியாண்டில், ஒரு கோடியே 94 லட்சத்து 23 ஆயிரத்து 247 மனித சக்தி நாட்கள் உருவாக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இதில், கடந்த மார்ச் 31ம் தேதி வரை ஒரு கோடியே 93 லட்சத்து 71 ஆயிரத்து 520 மனித சக்தி நாட்கள் உருவாக்கி, இலக்கு தொடப்பட்டுள்ளது.
கடந்த நிதி ஆண்டில், 11 ஆயிரத்து 656 குடும்பத்தினர் 100 நாட்கள் வேலை வாய்ப்பை முழுமையாக பெற்றுள்ளனர்.
மேலும், 2024-25ம் நிதி ஆண்டில் ஒரு கோடியே 17 லட்சத்து 82 ஆயிரத்து 166 மனித சக்தி நாட்கள் உருவாக்க இலக்கு நிர்ணம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 31ம் தேதி வரை 48 லட்சத்து 65 ஆயிரத்து 528 மனித சக்தி நாட்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு 5,415 பணிகள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இதுவரை 2,224 பணிகள் நிறைவடைந்துள்ளன. இதற்காக மொத்தம் 112 கோடியே 33 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.