/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 நபர்கள் கைது
/
சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 நபர்கள் கைது
ADDED : ஆக 24, 2025 10:17 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம் : திண்டிவனத்தில், சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 பேரை போலீசார் கைது செய்தனர்.
திண்டிவனம் அரசு மருத்துவமனை அருகே, தனியார் கிளப்பில் சூதாட்டம் நடப்பதாக ரோசனை போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு போலீசார், திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அங்கு பணம் வைத்து சூதாடிய, 12 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து, 38 ஆயிரத்து 120 ரூபாய் மற்றும் சூதாட பயன்படுத்திய டோக்கன் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்கின்றனர்.