/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆசிரியர் தகுதி தேர்வு 12,026 பேர் பங்கேற்பு
/
ஆசிரியர் தகுதி தேர்வு 12,026 பேர் பங்கேற்பு
ADDED : நவ 17, 2025 02:04 AM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டாம் தாளில், 12,026 பேர் பங்கேற்றனர்.
தமிழகத்தில் பள்ளிக்கல்வி துறையில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேற்று முன்தினம் முதல் தாள் மற்றும் நேற்று இரண்டாம் தாள் தகுதி தேர்வு நடந்தது.
அதன்படி,மாவட்டத்தில் நேற்று இரண்டாம் தாள் தேர்வுக்கு 13,313 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
மாவட்டத்தில் 46 மையங்களில் நடந்த தேர்வில், நேற்று 12,026 பேர் பங்கேற்றனர். மீதமுள்ள 1,287 பேர் ஆப்சென்டாகினர். காலை 8:30 மணி முதல் 9:30 மணிக்குள் வந்தவர்கள் மட்டுமே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். அதன் பின், வந்தவர்கள் அனுமதிக்கவில்லை. காலை 10:00 மணிக்கு துவங்கிய தேர்வு மதியம் 1:00 மணிக்கு முடிவடைந்தது.
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமிக்கப்பட்ட கண்காணிப்பு அலுவலர்கள் தேர்வை கண்காணித்தனர். தேர்வு மையங்கள், சி.சி.டி.வி., கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் அனுமதி வழங்கப் பட்டது.

