/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விவசாயி வீட்டில் 13 சவரன் நகை திருட்டு
/
விவசாயி வீட்டில் 13 சவரன் நகை திருட்டு
ADDED : ஜன 30, 2025 12:19 AM

விழுப்புரம்: விழுப்புரம் அருகே விவசாயி வீட்டில் 13 சவரன் நகை திருடு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் அருகே நன்னாடு கிராமத்தை சேர்ந்தவர் கலியபெருமாள், 70; விவசாயி. இவரது வீட்டில் பீரோவிலிருந்த நகைகள் திருட்டு போனதை நேற்று அறிந்து அதிர்ச்சியடைந்த கலியபெருமாள், தாலுகா போலீசில் புகாரளித்தார்.
போலீசார் வந்து விசாரித்தனர். அதில், கலியபெருமாள், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி, அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் சாவியை கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.
நேற்று வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீடும், பீரோவும் பூட்டியிருந்த நிலையில், பீரோவிலிருந்த 35 சவரன் நகையில், 13 சவரன் நகைகள் மட்டும் திருட்டு போனது தெரிய வந்தது.
இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து, மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.