/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
1.30 லட்சம் மெ.டன் நெல் கொள்முதல் ரூ.289.92 கோடி பட்டுவாடா: கலெக்டர்

ADDED : ஜூன் 24, 2025 07:03 AM
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் 1.30 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு 289 கோடியே 92 லட்சம் ரூபாய் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.
கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 16ம் தேதி வரை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் 1.30 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இதற்காக 21 ஆயிரத்து 304 விவசாயிகளுக்கு 289 கோடியே 92 லட்சம் ரூபாய் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.
கடந்தாண்டை விட கூடுதலாக 2024-25ம் ஆண்டில் 70 ஆயிரத்து 497 எக்டர் சம்பா மற்றும் நவரை சாகுபடி செய்து 95 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் பெறப்பட்டுள்ளது.