/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தொழிற்சங்கத்தினர் 130 பேர் கைது
/
தொழிற்சங்கத்தினர் 130 பேர் கைது
ADDED : ஜூலை 10, 2025 07:04 AM

விழுப்புரம் : விழுப்புரத்தில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்க கூட்டமைப்பினர், 130 பேர் கைது செய்யப்பட்டனர்.
அகில இந்திய பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக, விழுப்புரம் சி.ஐ.டி.யு., தொழிற்சங்க கூட்டமைப்பினர், நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் தலைமை தபால் நிலையம் முன்பு நடந்த போராட்டத்திற்கு சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் முத்துக்குமரன் தலைமையில் தொழிற் சங்க நிர்வாகிகள், சங்கத்தினர் கலந்துகொண்டு, மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர். இதில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும்; தொழிலாளர்களை பாதிக்கும் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 20 பெண்கள், உட்பட 130 பேரை போலீசார் கைது செய்தனர்.