/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தொழில் நுட்ப பணிக்கான தேர்வில் 1,475 பேர் பங்கேற்பு
/
தொழில் நுட்ப பணிக்கான தேர்வில் 1,475 பேர் பங்கேற்பு
தொழில் நுட்ப பணிக்கான தேர்வில் 1,475 பேர் பங்கேற்பு
தொழில் நுட்ப பணிக்கான தேர்வில் 1,475 பேர் பங்கேற்பு
ADDED : அக் 27, 2024 03:50 AM
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வை 1,475 பேர் எழுதினர்.
விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வுகள் நேற்று நடந்தது.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லுாரி, விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளி, வி.ஆர்.பி., மேல்நிலைப் பள்ளி, ஜான்டூயி மேல்நிலைப் பள்ளி ஆகிய 4 மையங்களில் தேர்வு நடந்தது. தேர்வை எழுதுவதற்காக 3,225 பேர் விண்ணப்பித்தனர்.
காலையில் நடந்த தேர்வில் 1,475 பேர் பங்கேற்றனர். தேர்வு பணியில் ஒரு பறக்கும் படை அலுவலர், 2 நடமாடும் குழு அலுவலர்கள் மற்றும் 11 ஆய்வு அலுவலர்கள் ஈடுபட்டனர்.