ADDED : நவ 08, 2025 02:11 AM

செஞ்சி: செஞ்சி கோட்டையில் 'வந்தே மாதரம்' முழக்கத்தின் 150வது ஆண்டு நிறைவு விழா நடந்தது.
விடுதலை போராட்டத்தின் போது ஆங்கிலேயர்களுக்கு எதிராக எழுப்பப்பட்ட 'வந்தே மாதரம்' முழுக்கத்தின் 150 வது ஆண்டு நிறைவு விழா நேற்று நாடு முழுதும் கொண்டாடப்பட்டது.
செஞ்சி கோட்டையில் பா.ஜ., சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு மாநில செயலாளர் முரளி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர் மாநில இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி பங்கேற்றார்.
மாநில துணைத் தலைவர் சம்பத், விழுப்புரம் வடக்கு மாவட்ட தலைவர் விநாயகம், செஞ்சி தொகு தி அமைப்பாளர் கோபிநாத் முன்னிலை வகித்தனர்.
இணை அமைப்பாளர் அன்பழகன், பொதுச் செயலாளர் பாண்டியன், முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளர் எத்திராஜ், ஒன்றிய தலைவர்கள் தாராசிங், ஏழுமலை, பிரசன்னா, அசோக்குமார், முன்னாள் ஒன்றிய தலைவர் ராமு, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சரவணன், ஞானமணி மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொது மக்கள், தன்னார்வலர்கள், பா.ஜ., தொண்டர்கள் பங்கேற்றனர்.
பங்கேற்ற அனைவரும் 'வந்தே மாதரம்' முழுக்க பாடலை பாடினர்.
தேசியக் கொடியுடன் வந்தே மாதரம் முழக்கத்துடன் கோட்டை வளாகத்தை சுற்றி வந்தனர்.

