/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 15,125 மனுக்கள்... குவிந்தன; மகளிர் உரிமை தொகைக்கு 5,409 பேர் விண்ணப்பம்
/
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 15,125 மனுக்கள்... குவிந்தன; மகளிர் உரிமை தொகைக்கு 5,409 பேர் விண்ணப்பம்
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 15,125 மனுக்கள்... குவிந்தன; மகளிர் உரிமை தொகைக்கு 5,409 பேர் விண்ணப்பம்
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 15,125 மனுக்கள்... குவிந்தன; மகளிர் உரிமை தொகைக்கு 5,409 பேர் விண்ணப்பம்
ADDED : ஜூலை 23, 2025 01:51 AM

விழுப்புரம்:  மாவட்டத்தில் நடந்து வரும் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில், 4 நாட்களில் பதிவான 15,125 மனுக்களில், 5,409 பேர் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் அரசு திட்டங்களை பொதுமக்களிடன் இருப்பிடங்களுக்கு அருகிலேயே சென்று வழங்க உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் துவங்கப்பட்டுள்ளது.
இம்முகாமை, கடலுார் மாவட்டம் சிதம்பரத்தில் கடந்த 15ம் தேதி முதல்வர் ஸ்டாலின், துவக்கி வைத்தார். தமிழகம் முழுவதும் அன்றைய தினத்தில் இருந்து, வரும் நவ., மாதம் வரை 10,000 முகாம்கள் நடத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள கடைகோடி மக்களுக்கும், அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள், திட்டங்கள் அவர்கள் வசிக்கும் பகுதிகளில் சென்று வழங்கப்பட உள்ளது.
நகர்ப்புறப் பகுதிகளில் நடக்கும் முகாம்களில், 13 துறைகள் 43 சேவைகள் மற்றும் ஊரகப்பகுதிகளில் நடக்கும் முகாம்களில், 15 துறைகள் 46 சேவைகள் வழங்கப்படுகிறது.
ஜாதி சான்று, பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை, மகளிர் உரிமைத் தொகை, மருத்துவ காப்பீட்டு அட்டை, ஆதார் அட்டை திருத்தம், ரேஷன் கார்டு முகவரி திருத்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு பொதுமக்கள் முகாமில் மனு கொடுத்து பயன்பெற அறிவுறுத்தப்பட்டது.
குறிப்பாக, அரசு அதிகாரிகள் மற்றும் ஆளும்கட்சியினர், இம்முகாமில் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பித்து பயன்பெற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் இத்திட்டத்தில், 236 முகாம்கள் ஊரகப் பகுதிகளிலும், 55 முகாம்கள் நகரப் பகுதிகளிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதில், முதற்கட்டமாக கடந்த 15ம் தேதி துவங்கி வரும் ஆக., 14ம் தேதி வரை 102 முகாம்கள் நடத்தப்படுகிறது.
இதற்காக, 619 தன்னார்வலர்கள் மூலம் 2,01,632 வீடுகளுக்கு சென்று விண்ணப்பங்கள் மற்றும் தகவல் கையேடுகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கடந்த 15ம் தேதி துவங்கி 18ம் தேதி வரை மாவட்டம் முழுவதும் 21 இடங்களில் முகாம் நடந்துள்ளது.
இது குறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மாவட்டத்தில் நடக்கும் இம்முகாமில் மனுக்கள் கொடுக்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது.
அதில், ஆதார் அட்டை, ரேஷன் கார்டு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் இருந்து நான்கு நாட்களில் மட்டும் 15,125 மனுக்கள் பெறப்பட்டன.
இதில், 5,409 மனுக்கள் மகளிர் உரிமை தொகை கேட்டு பெண்கள் மனு கொடுத்துள்ளனர். அதாவது மொத்த மனுக்களில், மூன்றில் ஒரு பங்கு மனு மகளிர் உரிமை தொகைக்கு வந்துள்ளது.
மீதமுள்ள 9,716 மனுக்கள் இதர கோரிக்கைகளை வலியுறுத்தி பெறப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மகளிர் உரிமை தொகை விடுப்பட்ட பெண்கள், இம்முகாமில் மனு கொடுப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

