/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு பஸ்கள் மோதல் 17 பேர் படுகாயம்
/
அரசு பஸ்கள் மோதல் 17 பேர் படுகாயம்
ADDED : ஜன 26, 2025 04:53 AM
விழுப்புரம்: விழுப்புரம் அருகே இரு அரசு பஸ்கள் மோதிய விபத்தில், 17 பேர் காயமடைந்தனர்.
சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவு திருச்சிக்கு அரசு பஸ் புறப்பட்டது. சின்னசேலம் அடுத்த பொட்டியம் கிராமத்தை சேர்ந்த அருண்குமார்,30; பஸ்சை ஓட்டினார். நள்ளிரவு 1:45 மணிக்கு பஸ் விழுப்புரம் அடுத்த அய்யூர்அகரம் மேம்பாலத்தில் சென்றபோது, எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற அரசு விரைவு பஸ்சின் பின்னால் மோதியது. அதில், இரு பஸ்களில் இருந்த பயணிகள் பலர் காயடைந்தனர்.
விபத்தில் காயமடைந்த சென்னை அடையாறு சத்யமூர்த்தி மனைவி சித்ரா,50; சேலம் பாலச்சந்திரன்,30; மாணிக்கம்,50; ஆத்துார் புதுப்பேட்டை முகமதுஉசேன்,29; செஞ்சி அப்துல்பஷீர், 27; சங்ககிரி ஆறுமுகம்,55; ராசிபுரம் பொன்சங்கர்,33; உள்ளிட்ட 17 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்த 17 பேரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்திற்குள்ளான இரு பஸ்களையும் போலீசார் அப்புறப்படுத்தினர். இந்த விபத்தினால், சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து தடைப்பட்டது.

