/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தனியார் துறை வேலை வாய்ப்பு சிறப்பு முகாமில் 17 பேர் தேர்வு
/
தனியார் துறை வேலை வாய்ப்பு சிறப்பு முகாமில் 17 பேர் தேர்வு
தனியார் துறை வேலை வாய்ப்பு சிறப்பு முகாமில் 17 பேர் தேர்வு
தனியார் துறை வேலை வாய்ப்பு சிறப்பு முகாமில் 17 பேர் தேர்வு
ADDED : அக் 18, 2024 11:36 PM

விழுப்புரம்: விழுப்புரத்தில் நடந்த தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் 17 பேர் தேர்வாகினர்.
விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்புத் துறை சார்பில், தனியார் துறை வேலை வாய்ப்பு சிறப்பு முகாம் நேற்று நடந்தது. வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடந்த முகாமிற்கு வேலை வாய்ப்புத் துறை உதவி இயக்குனர் பாலமுருகன் தலைமை தாங்கினார்.
சென்னை, புதுச்சேரி, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 15 தனியார் நிறுவனத்தின் பிரதிநிதிகள், வேலை வாய்ப்புக்கான நேர்காணலை நடத்தினர். வேலை நாடுநர்கள் 137 பேர் பங்கேற்றனர்.
இதில், 17 பேர் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டு, அதற்கான பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. மேலும், 21 பேர் முதல்கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்று, அடுத்த கட்ட தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.