/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆசிரியர் வீட்டில் 17 சவரன் திருட்டு
/
ஆசிரியர் வீட்டில் 17 சவரன் திருட்டு
ADDED : ஆக 28, 2025 02:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்:அரசு பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் 17 சவரன் நகை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம், விராட்டிக்குப்பம் பாதை, செல்வா நகரை சேர்ந்தவர் தாஸ், 53; நரசிங்கனுார் அரசு உதவிபெறும் பள்ளி தலைமை ஆசிரியர். இவரது மனைவி குளோரி, விழுப்புரம் பி.என்., தோப்பு நகராட்சி மேல்நிலை பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார்.
இருவரும் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு பணிக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பினர்.
நேற்று காலை 8:00 மணிக்கு குளோரி பீரோவில் இருந்த நகையை பார்த்தபோது, 17 சவரன் நகை காணாமல் போனது தெரிந்தது.
விழுப்புரம் தாலுகா போலீசார், மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.