/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாவட்டத்தில் பி.டி.ஓ.,க்கள் 18 பேர் பணியிட மாற்றம்
/
மாவட்டத்தில் பி.டி.ஓ.,க்கள் 18 பேர் பணியிட மாற்றம்
மாவட்டத்தில் பி.டி.ஓ.,க்கள் 18 பேர் பணியிட மாற்றம்
மாவட்டத்தில் பி.டி.ஓ.,க்கள் 18 பேர் பணியிட மாற்றம்
ADDED : ஏப் 02, 2025 06:25 AM
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 18 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விழுப்புரம் உதவி இயக்குநர் (தணிக்கை) அலுவலகம் ஜானகி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைக்கும், ஒலக்கூர் ஊராட்சி ஒன்றியம் ரவி, விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைக்கும், இங்கிருந்த வெங்கடசுப்ரமணியன், கண்டமங்கலத்திற்கும்.
கண்டமங்கலத்தில் இருந்த ராஜவேல், விழுப்புரம் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அலுவலகத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மரக்காணம் ஊராட்சி ஒன்றியம் சிவநேசன், மேல்மலையனுாருக்கும், மேல்மலையனுாரில் இருந்த சையது முகமது விக்கிரவாண்டிக்கும், விக்கிரவாண்டியில் இருந்த சுபாஷ் சந்திரபோஸ் வானுாருக்கும் உட்பட விழுப்புரம் மாவட்டத்தில் 18 பி.டி.ஓ.,க்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் பிறப்பித்துள்ளார்.

