/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,808 வழக்குகளுக்கு தீர்வு
/
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,808 வழக்குகளுக்கு தீர்வு
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,808 வழக்குகளுக்கு தீர்வு
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,808 வழக்குகளுக்கு தீர்வு
ADDED : மார் 15, 2026 04:20 AM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரம் மற்றும் அனைத்து தாலுகா நீதிமன்றங்களில் 13 அமர்வுகளாக தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது.
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர், முதன்மை மாவட்ட நீதிபதி மணிமொழி தலைமை தாங்கி, தேசிய மக்கள் நீதிமன்றத்தை துவக்கி வைத்தார். செயலாளர் ஜெயச்சந்திரன் வரவேற்றார். நீதிபதிகள் ராஜசிம்மவர்மன், பாக்கியஜோதி, வினோதா, ராஜமகேஷ், தமிழ்ச்செல்வன், வரலட்சுமி, பழனிக்குமார், முருகன், பாலரத்னா, மாஜிஸ்திரேட் எண்.1 சந்திரகாசபூபதி, எண்.2 அரவிந்த்பாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நீதிபதி கவிதா வரவேற்றார்.
வழக்கறிஞர்கள் சுப்ரமணியன், நடராஜன், ராஜகுரு, சகாதேவன், வேலவன் உட்பட வழக்கறிஞர்கள், காப்பீட்டு நிறுவன அதிகாரிகள், நீதிமன்ற பணியாளர்கள் பங்கேற்றனர்.
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 13 அமர்வுகளில், நிலுவையில் உள்ள 4000க்கும் மேற்பட்ட வழக்குகள் தீர்விற்காக எடுக்கப்பட்டது.
அதில், 1,344 வழக்குகளில் 15 கோடியே 41 லட்சத்து 12 ஆயிரத்து 74 மற்றும் நீதிமன்றத்தில் பதியப்படாத வங்கி வாராக்கடன் சார்ந்த 3,700க்கும் மேற்பட்ட வழக்குகள் தீர்விற்காக எடுக்கப்பட்டு, அதில் 464 வழக்குகளில் 4 கோடியே 79 லட்சத்து 33 ஆயிரத்து 616 ரூபாய் உட்பட மொத்தம் 1,808 வழக்குகளில் 20 கோடியே 20 லட்சத்து 45 ஆயிரத்து 690 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது.

