/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் மாவட்டத்தில் 1,966 ஓட்டுச்சாவடிகள் தயார்! 16.78 லட்சம் வாக்காளர்கள் ஓட்டளிக்க ஏற்பாடு
/
விழுப்புரம் மாவட்டத்தில் 1,966 ஓட்டுச்சாவடிகள் தயார்! 16.78 லட்சம் வாக்காளர்கள் ஓட்டளிக்க ஏற்பாடு
விழுப்புரம் மாவட்டத்தில் 1,966 ஓட்டுச்சாவடிகள் தயார்! 16.78 லட்சம் வாக்காளர்கள் ஓட்டளிக்க ஏற்பாடு
விழுப்புரம் மாவட்டத்தில் 1,966 ஓட்டுச்சாவடிகள் தயார்! 16.78 லட்சம் வாக்காளர்கள் ஓட்டளிக்க ஏற்பாடு
ADDED : ஏப் 18, 2024 06:49 AM

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில், 1966 ஓட்டுச்சாவடிகளில் லோக்சபா தேர்தல் நடக்கிறது. 16.78 லட்சம் வாக்காளர்கள் ஓட்டளிக்க தீவிரமான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில், லோக்சபா தேர்தல் நாளை (ஏப்.19) நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பழனி தலைமையில், தேர்தல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில், செ ஞ்சி, மயிலம், திண்டிவனம், வானூர், விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலுார் என மொத்தமுள்ள 7 சட்டசபை தொகுதிகளிலும், 1966 ஓட்டுச்சாவடிகள் அமைந்துள்ளது.
இதில், ஓட்டுச்சாவடிகளுக்கு தலா 4 பேர் வீதம் 7,864 ஓட்டுச்சாவடி அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர். மேலும், 20 சதவீதம் கூடுதல் தேவைக்காக, 1,572 அலுவலர்கள் தயார் நிலையில் உள்ளனர். 1,966 போலீஸ் ஓட்டுச்சாவடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மொத்தம் 2,679 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில், ஆண் வாக்காளர்கள் 8,28,550 பேரும், பெண் வாக்காளர்கள் 8,49,781 பேரும், இதரர் 220 பேரும் என மொத்தம் 16 லட்சத்து 78 ஆயிரத்து 551 பேர் வாக்களிக்க உள்ளனர். மேலும், ராணுவத்தில் பணிபுரியும் சர்வீஸ் வாக்காளர்களாக ஆண்கள் 1,164 பேரும், பெண்கள் 26 பேரும் என மொத்தம் 1,190 பேரும் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் 51 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டு, கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பதற்றமான ஓட்டுச்சாவடிகள் உள்ளிட்ட 1,214 ஓட்டுச்சாவடிகளில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டு, நேரடி வெப்காஸ்டிங் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஓட்டுச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு தயார்படுத்தப்பட்டுள்ளது. பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் 51 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு, கூடுதல் கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்துள்ளனர். 1,966 ஓட்டுச்சாவடிகளில் பயன்படுத்துவதற்கு மின்னணு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன.
இதற்காக, பேலட் யூனிட்கள் 4,152, கன்ட்ரோல் யூனிட் 2076, விவிபேட் 2,249 இயந்திரங்கள் என 20 சதவீதம் கூடுதல் மின்னணு இயந்திரங்கள் தயார் நிலையில், அந்தந்த உதவி தேர்தல் நடத்தும் (தாலுகா அலுவலகம்) அலுவலகத்தில் சீல் வைத்து வைக்கப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்களில், சின்னங்கள், வேட்பாளரின் பெயர்கள் பொருத்தி, தயார் நிலையில் வைத்துள்ளனர். இன்று, அந்த இயந்திரங்கள், போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்ல ஏற்பாடுகள நடந்து வருகிறது.
லோக்சபா தேர்தலுக்கான, விழுப்புரம்(தனி) தொகுதியில், விழுப்புரம், விக்கிரவாண்டி, திண்டிவனம், வானுார், உளுந்துார்பேட்டை,திருக்கோவிலுார் ஆகிய சட்டபேரவை தொகுதிகள் அடங்குவதால், தேர்தல் நடத்தும் அலுவலர் பழனி தலைமையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதே போல், ஆரணி லோக்சபா தொகுதியில் மயிலம், செஞ்சி ஆகிய தொகுதிகள் அடங்கியுள்ளதால், அதற்கான பணிகளும் நடந்து வருகிறது.

