/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மது கடத்திய 198 பேர் கைது 33 வாகனங்கள் பறிமுதல் எஸ்.பி., சரவணன் தகவல்
/
மது கடத்திய 198 பேர் கைது 33 வாகனங்கள் பறிமுதல் எஸ்.பி., சரவணன் தகவல்
மது கடத்திய 198 பேர் கைது 33 வாகனங்கள் பறிமுதல் எஸ்.பி., சரவணன் தகவல்
மது கடத்திய 198 பேர் கைது 33 வாகனங்கள் பறிமுதல் எஸ்.பி., சரவணன் தகவல்
ADDED : ஏப் 04, 2025 04:30 AM
விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டத்தில், ஒரு மாதத்தில் நடத்திய சோதனையில் மதுபாட்டில், சாராயம் கடத்தியதாக 178 வழக்குகள் பதிந்து, 198 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் எஸ்.பி., சரவணன் கூறியதாவது:
விழுப்புரம் மாவட்டத்தில், கடந்த ஒரு மாதத்தில் நடத்திய சோதனையில் மதுபாட்டில், சாராயம் கடத்தியதாக 178 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 198 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டக்குப்பம், விக்கிரவாண்டி ஆகிய காவல் உட்கோட்டங்களில், சிறப்பு மதுவிலக்கு வேட்டை நடத்தப்பட்டது.
இதில், கோட்டக்குப்பம் மதுவிலக்கு பிரிவில், பைக்கில் ரகசிய அறை அமைத்து மதுபாட்டில் கடந்த முயன்ற வழக்கு மற்றும் விழுப்புரத்தில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட பைக்கில் மதுபானங்கள் கடத்தியவர் கைதான வழக்குகளில், மது கடத்தியவர்களுடன், அந்த வாகனங்களின் வடிவங்களை மாற்ற உதவியவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில், கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் மதுபானங்கள் கடத்திய 178 சம்பவங்களில், 221 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அதில் 198 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில், 107 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வழக்குகளில், 28 லிட்டர் புதுச்சேரி சாராயம், 6,232 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 71 லிட்டர் கள் கைபற்றப்பட்டுள்ளது. 26 பைக்குகள், 2 ஆட்டோ, 6 கார்கள் என மொத்தம் 33 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு எஸ்.பி., கூறினார்.
எச்சரிக்கை
மதுகடத்தலில் சிக்கும் பைக், கார் உள்ளிட்ட வாகனங்களில், நுாதன முறையில் ரகசிய அறை வைத்து, சிலர் மதுபாட்டில், சாராயம் கடத்தப்படுவதும், அதற்காக மெக்கானிக் உதவியுடன் வாகனங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதும் தெரியவந்தது.
மது கடத்தல் வாகனங்களில், வடிவமைப்பாளர்களையும் சேர்த்து போலீசார் கைது செய்துள்ளனர்.
எனவே, இதுபோன்று ரகசிய அறை, வடிவமைப்பை மாற்றும் மெக்கானிக்குகள் மீதும், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

