தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ஒருவரை தாக்கிய 2 பேர் கைது 

ஒருவரை தாக்கிய 2 பேர் கைது 

ஒருவரை தாக்கிய 2 பேர் கைது 


ADDED : பிப் 26, 2024 11:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 26, 2024 11:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம் : வளவனுார் அருகே சிறுநீர் கழித்தவரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம் அடுத்த ஏ.கே.குச்சிப்பாளையத்தைச் சேர்ந்தவர் தமிழழகன், 45; இவர், கடந்த 23ம் தேதி, வளவனுாரில் உள்ள தனது நண்பர் மோகன் என்பவரின் சைக்கிள் கடைக்கு சென்றிருந்தார்.

அப்போது, சைக்கிள் கடைக்கு அருகே உள்ள பகுதியில் தமிழழகன் சிறுநீர் கழித்துள்ளார். அங்கிருந்த, அப்பகுதியைச் சேர்ந்த சரவணன், 47, அரிகிருஷ்ணன், 21, ஆகாஷ், 18; ஆகியோர் தமிழழகனை தாக்கியுள்ளனர்.

புகாரின் பேரில், வளவனுார் போலீசார் 3 பேர் மீதும் வழக்கு பதிந்து, சரவணன், அரிகிருஷ்ணன் ஆகியோரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us