ADDED : ஜூலை 23, 2025 02:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம், : விழுப்புரம் அடுத்த வளவனுாரைச் சேர்ந்தவர் பிரபாகரன் மனைவி தமிழரசி, 25; இவரது மாமியார் வள்ளி. இவர், அதே பகுதியைச் சேர்ந்த சேகர் மனைவி ராணி, 67; பிரபு மனைவி இந்துமதி, 39; ஆகியோரிடம் 7 மாதங்களுக்கு முன் 2 லட்சம் ரூபாய் பணம் வாங்கிக்கொண்டு துபாய் சென்றுவிட்டார்.
அதற்காக, தமிழரசி மாதந்தோறும் 10 ஆயிரம் ரூபாயை ராணி, இந்துமதியிடம் கொடுத்து வந்துள்ளார். கடந்த 2 மாதங்களாக பணம் கொடுக்காததால் ராணி, இந்துமதி ஆகியோர் தமிழரசியை திட்டி, தாக்கினர். வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து ராணி, இந்துமதியை கைது செய்தனர்.