ADDED : டிச 18, 2024 06:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம் : மயிலம் அடுத்த சிறுவை சாலையில் வாலிபரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மயிலம் அடுத்த சிறுவை கிராமத்தைச் சேர்ந்தவர் தனசேகரன், 30; இவர், கடந்த 16ம் தேதி வீடூருக்கு சென்றார். அங்கு, பைக்கில் வந்த வீடூர் கிராமத்தைச் சேர்ந்த அய்யனார் மகன் .சேட்டு 21; என்பவர், தனகேரன் மீது இவர் மீது மோதியதில் வலது காலில் காயம் ஏற்பட்டது.
இதனால், அவர்களுக் குள் தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர். அப்போது அங்கு வந்த சேட்டு தம்பி ராஜேஷ், 18; கத்தியால் தனசேகரை வெட்டியுள்ளார்.
இது குறித்த புகாரின் பேரில் சேட்டு, ராஜேஷ் ஆகிய இருவர் மீதும் மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து அவர்களை கைது செய்தனர்.