/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
லிப்ட் கேட்டு சென்ற பெண்ணிடம் நகை, பணம் பறித்த 2 பேருக்கு வலை
/
லிப்ட் கேட்டு சென்ற பெண்ணிடம் நகை, பணம் பறித்த 2 பேருக்கு வலை
லிப்ட் கேட்டு சென்ற பெண்ணிடம் நகை, பணம் பறித்த 2 பேருக்கு வலை
லிப்ட் கேட்டு சென்ற பெண்ணிடம் நகை, பணம் பறித்த 2 பேருக்கு வலை
ADDED : டிச 10, 2024 06:55 AM
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே பைக்கில் லிப்ட் கேட்டுச் சென்ற பெண்ணிடம் நகை மற்றும் பணத்தை பறித்துச் சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த டி. எடையார் கிராமத்தைச் சேர்ந்தவர் அமிர்தலிங்கம் மனைவி மகாலட்சுமி, 23; இவர் நேற்று முன்தினம் இரவு 9:00 மணியளவில் திருவெண்ணெய்நல்லுாரில் திருக்கோவிலுார் சாலை பஸ் நிறுத்த பகுதியில் டி. எடையார் செல்ல பஸ்சுக்காக காத்திருந்தார்.
வெகு நேரமாகியும் பஸ் வராததால் அந்த வழியாக பைக்கில் வந்தவர்களிடம் லிப்ட் கேட்டுள்ளார்.
அப்போது, பைக்கில் வந்த 2 வாலிபர்கள் மகாலட்சுமி ஏற்றிக்கொண்டு டி.எடையார் நோக்கிச் சென்றனர்.
டி. எடையார் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சென்ற போது திடீர் என பைக்கில் பெட்ரோல் இல்லை எனக் கூறி மகாலட்சுமியை இறங்கும்படி கூறினர்.
மகாலட்சுமி பைக்கில் இருந்து இறங்கியதும், இருவரும் மகாலட்சுமியின் வாயை பொத்தி அவர் அணிந்திருந்த கம்மல், செயின் மற்றும் கட்டபையில் வைத்திருந்த 10 ஆயிரம் ரூபாய், மொபைல் போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பினர்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்கள் இருவரையும் தேடி வருகின்றனர்.