/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மதுபாட்டில் கடத்திய 2 பேர் கைது
/
மதுபாட்டில் கடத்திய 2 பேர் கைது
ADDED : ஜூன் 07, 2025 01:35 AM
வானுார் : இருவேறு இடங்களில் புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்திய மூவரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கிளியனூர் போலீசார் நேற்று இளவம்பட்டு சந்திப்பில் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது, சேதராப்பட்டு மார்க்கத்தில் இருந்து வந்த பைக்கை மடக்கி சோதனை செய்தனர். பைக்கில், புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்தி செல்வது தெரிய வந்தது.
போலீஸ் விசாரணையில், மதுபாட்டில் கடத்தி வந்தது, கிளியனுார் அருகில் உள்ள உலகாபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த டில்லிபாபு, 20; ஓமந்துார் சேர்ந்த 16 வயது சிறுவன் என்பதும், புதுச்சேரி மாநிலம் லிங்காரெட்டிப்பாளையத்தில் இருந்து மதுபாட்டில்கள் வாங்கி சென்று, தங்கள் ஊரில் அதிக விலைக்கு விற்பதும் தெரிய வந்தது. டில்லிபாபுவை கைது செய்த போலீசார் 155 மதுபாட்டில்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய பைக்கை பறிமுதல் செய்தனர்.
கிளியனுார் போலீசார் தைலாபுரம் சந்திப்பில் வாகன தணிக்கையில் ஈடுப்பட்ட போது, புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்த பெருமுக்கல் கிராமத்தை சேர்ந்த பாலசுந்தர், 20; என்பரை கைது செய்து, 96 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.