/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மது பாட்டில்கள் கடத்தல் 2 பேர் கைது
/
மது பாட்டில்கள் கடத்தல் 2 பேர் கைது
ADDED : அக் 24, 2025 03:27 AM

விழுப்புரம்: வளவனுார் அருகே மினி லாரியில் மதுபாட்டில் கடத்திய இருவரை போ லீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் சுஜாதா மற்றும் போலீசார், நேற்று முன்தினம் மாலை வளவனுார் அடுத்த சிறுவந்தாடு சோதனை சாவடி அருகே வாகன தணிக்கை செய்தனர்.
அப்போது, அந்த வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில், புதுச்சேரியிலிருந்து மதுபானங்கள் கடத்தி வந்தது தெரிந்தது. இதனையடுத்து, வாகனத்தை பறிமுதல் செய்து, விசாரணை செய்தனர்.
போலீசார் விசாரணையில், மது கடத்தலில் ஈடுபட்டது, புதுச்சேரி மாநிலம், நெட்டப்பாக்கம், அம்பேத்கர் தெருவை சேர்ந்த கதிர்வேல் மகன் குமரகுரு, 43; கடலுார் மாவட்டம், விருதாச்சலம் தாலுகா பள்ளிக் கூட தெருவை சேர்ந்த சிவபாலன் மகன் சிலம்பரசன்,38; என தெரிய வந்தது.
இதனையடுத்து, மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் இருவரையும் கைது செய்து, விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, வேடம்பட்டு சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து, 200 மதுபாட்டில்கள், மினி லாரியை பறிமுதல் செய்தனர்.

