/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அதிவேகமாக வாகனம் ஓட்டிய 2 பேர் கைது
/
அதிவேகமாக வாகனம் ஓட்டிய 2 பேர் கைது
ADDED : நவ 12, 2025 06:48 AM
விழுப்புரம்: விழுப்புரத்தில் அதிவேகமாக வாகனம் ஓட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் குணசேகர், பெரியார் நகர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது, பண்ருட்டி அடுத்த பெரிய ஏலந்தம்பட்டியை சேர்ந்த பிரபாகரன் மகன் வாசு, 19; என்பவர் பைக்கில் பொதுமக்களுக்கு விபத்து ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாக சென்றது தெரியவந்தது. அவர் மீது வழக்கப் பதிந்து கைது செய்து, பைக்கையும் பறிமுதல் செயத்னர்.
இதேபோன்று, விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு பகுதியில் சரக்கு வேனை வேகமாக ஓட்டிச் சென்ற விக்கிரவாண்டி அடுத்த வி.சாத்தனுாரை சேர்ந்த அழகுதமிழ், 25; என்பவரை விழுப்புரம் மேற்கு போலீசார் கைது செய்தனர்.

