தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ விபத்து வழக்கில் நஷ்ட ஈடு வழங்காததால் 2 பஸ்கள் ஜப்தி

 விபத்து வழக்கில் நஷ்ட ஈடு வழங்காததால் 2 பஸ்கள் ஜப்தி

 விபத்து வழக்கில் நஷ்ட ஈடு வழங்காததால் 2 பஸ்கள் ஜப்தி


ADDED : ஏப் 21, 2026 11:05 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 21, 2026 11:05 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விழுப்புரம்: விழுப்புரத்தில் விபத்து வழக்கில் நஷ்ட ஈடு வழங்காததால் 2 பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டது.

விழுப்புரம் அடுத்த சத்தியகண்டநல்லுாரைச் சேர்ந்தவர் செல்வராஜ், 62; விவசாயி. இவர், கடந்த 2023ம் ஆண்டு ஜூன் 4ம் தேதி பைக்கில் சென்றபோது, அங்குள்ள பஸ் நிறுத்தத்தில், விழுப்புரம் நோக்கி சென்ற அரசு பஸ் மோதிய விபத்தில் இறந்தார்.

இது குறித்து, அவரது மனைவி வசந்தா, இழப்பீடு கேட்டு விழுப்புரம் மோட்டார் வாகன விபத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, 2024ம் ஆண்டு நவம்பர் 15ம் தேதி செல்வராஜ் குடும்பத்திற்கு 7.24 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு உத்தரவிட்டார். இழப்பீடு வழங்காததால், நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த நீதிபதி ஸ்ரீராம், நஷ்டஈடு மற்றும் வட்டி சேர்த்து 9 லட்சத்து 1,525 ரூபாய் வழங்க கடந்த மாதம் உத்தரவிட்டார்.

நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாததால், நேற்று விழுப்புரம் பஸ் நிலையத்திற்கு வந்த விழுப்புரம் கோட்ட அரசு பஸ்சை, விழுப்புரம் கோர்ட் கட்டளை நிறைவேற்றுனர் பாக்கியராஜ், வழக்கறிஞர் வேலவன், உதவியாளர் ரஞ்சித்குமார் உள்ளிட்டோர் முன்னிலையில் ஜப்தி செய்தனர்.

மற்றொரு வழக்கு விழுப்புரம் அடுத்த பிடாகம் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன், 38; வளத்தி ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர். இவர், கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி செஞ்சியிலிருந்து வந்த அரசு பஸ் மோதியதில் இறந்தார்.

இழப்பீடு கேட்டு அவரது மனைவி தீபா, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். விசாரித்த விழுப்புரம் மோட்டார் வாகன விபத்து நீதிமன்றம், 37.12 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி தீர்ப்பளித்தது. உரிய இழப்பீடு வழங்காததால், நிறைவேற்று மனு தாக்கல் செய்தனர்.

மனுவை விசாரித்த நீதிபதி ஸ்ரீராம், இவ்வழக்கில் 43.46 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாததால் அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.

இதனையடுத்து, நேற்று விழுப்புரம் பஸ் நிலையத்திற்கு வந்த விழுப்புரம் கோட்ட அரசு பஸ்சை கோர்ட் ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us