sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 அ.தி.மு.க., எம்.பி.,யின் கோரிக்கையை ஏற்பு திண்டிவனத்தில் 2 எக்ஸ்பிரஸ்  ரயில்கள் நிறுத்தம்

/

 அ.தி.மு.க., எம்.பி.,யின் கோரிக்கையை ஏற்பு திண்டிவனத்தில் 2 எக்ஸ்பிரஸ்  ரயில்கள் நிறுத்தம்

 அ.தி.மு.க., எம்.பி.,யின் கோரிக்கையை ஏற்பு திண்டிவனத்தில் 2 எக்ஸ்பிரஸ்  ரயில்கள் நிறுத்தம்

 அ.தி.மு.க., எம்.பி.,யின் கோரிக்கையை ஏற்பு திண்டிவனத்தில் 2 எக்ஸ்பிரஸ்  ரயில்கள் நிறுத்தம்

1


ADDED : மார் 11, 2026 06:51 AM

Google News

ADDED : மார் 11, 2026 06:51 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்: திண்டிவனம் ரயில் நிலையத்தில், உழவன் எக்ஸ்பிரஸ், மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுத்த, அ.தி.மு.க., ராஜ்யசபா உறுப்பினர் சண்முகத்திற்கு ரயில் உபயோகிப்பாளர் நல சங்கத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

திண்டிவனம், நகரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளதால், விழுப்புரம், புதுச்சேரி, செஞ்சி, திருவண்ணாமலை, வந்தவாசி மற்றும் காஞ்சிபுரம் போன்ற பல நகரங்களை இணைக்கக்கூடியது.

நகரத்தைச் சுற்றியுள்ள 400க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பல்வேறு பணிகளுக்காக சென்னைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது.

மேலும், சிப்காட், சிட்கோ போன்ற தொழில்துறை பகுதிகள் திண்டிவனம் நகரத்திற்கு அருகே இருப்பதால், போக்குவரத்து வசதிகளை வலுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

கொரோனா தொற்றுக்குப் பின் உழவன் எக்ஸ்பிரஸ், மங்களூரு எக்ஸ்பிரஸ், ராக்போர்ட் எக்ஸ்பிரஸ், சேலம் எக்ஸ்பிரஸ், காரைக்கால் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் திண்டிவனத்தில் நிறுத்துவதில்லை. இதனால் வணிகர்கள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து ரயில்வே நிர்வாகத்திடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதேபோல், முதலாவது நடைமேடையில் நிழற்கூறை முழுமையாக அமைக்கப்பவில்லை. எம்.பி., தொகுதி நிதியிலிருந்து மக்களின் பாதுகாப்பிற்காக தங்குமிடம் வசதியை வழங்க வேண்டும்.

மேலும் திண்டிவனத்தில் 5 எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என திண்டிவனம் வட்டம் ரயில் உபயோகிப்பாளர் சங்கத்தினர் அ.தி.மு.க., ராஜ்யசபா உறுப்பினர் சண்முகத்திடம் மனு அளித்திருந்தனர்.

இந்த மனுவை டில்லியில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை, சண்முகம் எம்.பி., நேரில் சந்தித்து கொடுத்தார். இதை தொடர்ந்து மத்திய ரயில்வே அமைச்சர் உத்தரவின் பேரில், திண்டிவனம் ரயில் நிலையத்தில், உழவன் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்.16865/168660) மற்றும் மங்களூரு எக்ஸ்பிரஸ் (வண்டி எண்.16159/16160) ஆகிய ரயில்கள் நின்று செல்லும் என எம்.பி.,க்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

ரயில் உபயோகிப்பாளர் நல சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுத்த சண்முகம் எம்.பி.,க்கு சங்கத் தலைவர் கதிர் சங்கர், செயலாளர் கபில் கோல்ச்சா நன்றி தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us