/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கத்தியை காட்டி மிரட்டிய 2 பேர் கைது
/
கத்தியை காட்டி மிரட்டிய 2 பேர் கைது
ADDED : ஏப் 06, 2025 05:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டியில் கத்தியை காட்டி மிரட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
விக்கிரவாண்டி இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையில், சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் விக்கிரவாண்டி கடை வீதியில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில் இருவரும், கடந்த வாரம் கடை வீதியில் பைக்கில் செல்லும் போது கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டி சென்றது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, ஆர்.சி மேலக்கொந்தையைச் சேர்ந்த கிரிராஜன், 20: ஆவுடையார்பட்டை சேர்ந்த ரீகன்ராஜ், 21; ஆகிய இருவரை கைது செய்தனர்.

