தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ கல்லுாரி மாணவரை தாக்கிய 2 பேர் கைது

கல்லுாரி மாணவரை தாக்கிய 2 பேர் கைது

கல்லுாரி மாணவரை தாக்கிய 2 பேர் கைது


ADDED : செப் 04, 2026 05:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 04, 2026 05:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்: கல்லுாரி மாணவரை தாக்கிய தகராறில், 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து இருவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

விழுப்புரம் அடுத்த சிறுவாக்கூரை சேர்ந்தவர் சீனுவாசன் மகன் பிரபாகரன், 19; விழுப்புரம் தனியார் பாலிடெக்னிக் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த 2ம் தேதி கல்லுாரி முடிந்து விழுப்புரத்தில் இருந்து கல்பட்டிற்கு சென்ற அரசு பஸ்சில் பயணம் செய்தார்.

அப்போது, பஸ்சில் பயணித்த தெளி கிராமத்தை சேர்ந்த மாணவர்களுக்கும், பிரபாகரனுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது.

இதில், பிரபாகரனை, தெளியை சேர்ந்த மாணவர்கள் தாக்கினர். இதை தட்டிக்கேட்ட சீனுவாசனை, தெளியை சேர்ந்த செல்வராஜ், 22; முனியப்பன், 22; ஜனார்த்தனன், காந்தி, அகில் ஆகியோர் சேர்ந்து திட்டி தாக்கினர்.

காணை போலீசார் செல்வராஜ் உள்ளிட்ட, 5 பேர் மீது வழக்குப்பதிந்தனர். செல்வராஜ், முனியப்பனை கைது செய்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us