நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் -வளவனுார் அருகே பணம் வைத்து சூதாடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வளவனுார் சப் இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் எஸ்.மேட்டுப்பாளையம் கிராமத்தில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு, பணம் வைத்து சூதாடிய அதே பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன், 33; ரவிச்சந்திரன், 32; ஆகியோர் மீது போலீசார் பதிந்து கைது செய்தனர். மேலும், தப்பியோடிய முத்துக்குமரன், 32; யுவராஜ், 28; ராஜசேகர், 35; ஆகியோரை தேடி வருகின்றனர்.

