ADDED : மார் 10, 2024 07:39 AM
அ நிறம் | அளவு
விழுப்புரம், : விழுப்புரத்தில் சூதாடிய வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மேற்கு சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தராசு தலைமையிலான போலீசார், நேற்று நாயக்கன்தோப்பு பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அங்கு, பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த புஷ்பலிங்கம், 50; ஜி.ஆர்.பி., தெரு ஏகாம்பரம், 60; ஆகியோர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
