/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சாராயம் வைத்திருந்த 2 பேர் கைது
/
சாராயம் வைத்திருந்த 2 பேர் கைது
ADDED : டிச 18, 2024 06:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம் : மயிலம் பஸ் நிலையம் அருகே புதுச்சேரி சாராயம் வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மயிலம் சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் நேற்று மயிலம் பஸ் நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு விற்பனை செய்வதற்காக புதுச்சேரி சாராயம் வைத்திருந்த சேதராப்பட்டு ஜெயவீரன், 51; மயிலம் ஜீவானந்தம், 51; ஆகிய இருவரையும் கைது செய்து 23 சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.