/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
லஞ்சம் பெற்ற எஸ்.ஐ., உட்பட 2 பேர் 'சஸ்பெண்ட்'
/
லஞ்சம் பெற்ற எஸ்.ஐ., உட்பட 2 பேர் 'சஸ்பெண்ட்'
ADDED : ஜன 19, 2025 02:53 AM
விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் போலீஸ் சோதனைச்சாவடியில் நேற்று முன்தினம் மாலை, சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் காந்திமோகன், போலீஸ்காரர் கலையரசன் பணியில் இருந்தனர்.
இருவரும், புதுச்சேரியில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நோக்கி சென்ற ஒரு காரை நிறுத்தி, சோதனை செய்தனர். காரில், புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் 2 இருந்தது. காந்திமோகன், கலையரசன் ஆகியோர், மதுகடத்தல் தொடர்பாக வழக்கு பதியாமல் இருக்க, காரில் வந்தவர்களிடம் 2,000 ரூபாய் லஞ்சம் வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்துள்ளனர்.
இதனையறிந்த எஸ்.பி., சரவணன், சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் காந்திமோகன், போலீஸ்காரர் கலையரசன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து நேற்று உத்தரவிட்டார்.

