/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மனைவியை தாக்கிய கணவர் உட்பட 2 பேர் கைது
/
மனைவியை தாக்கிய கணவர் உட்பட 2 பேர் கைது
ADDED : டிச 20, 2024 04:51 AM
கோட்டக்குப்பம்: கோட்டக்குப்பம் அருகே மனைவியை தாக்கிய கணவர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோட்டக்குப்பம் அடுத்த பிள்ளைச்சாவடி சுனாமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் விஜி, 37; இவரது மனைவி வள்ளத்தம்மாள், 28; விஜி வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பியது முதல் கணவன், மனைவிக்குமிடையே குடும்பத் தகராறு ஏற்பட்டது.
இதனால், வள்ளதம்மாள், பொம்மையார்பாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில் விஜி, வீட்டில் இருந்த பெட், இன்வெட்டர், சிலிண்டர் உள்ளிட்ட பொருட்களை, தனது அண்ணன் மோகன் வீட்டிற்கு எடுத்து சென்றார்.
இதையறிந்த வள்ளத்தம்மாள், கடந்த 7ம் தேதி கணவரிடம் சென்று தட்டிக்கேட்டுள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த விஜி மற்றும் அவரது குடும்பத்தினர், வள்ளத்தம்மாளை தாக்கினர்.
இது குறித்து வள்ளத்தம்மாள் அளித்த புகாரின் பேரில், விஜி, மோகன், விஜியின் சகோதரிகள் மாலா, ரமா, ரீனா, பிரியா ஆகியோர் மீது கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விஜி, மோகன் ஆகியோரை கைது செய்தனர்.