ADDED : செப் 14, 2026 05:42 PM
அ நிறம் | அளவு
விழுப்புரம்: விழுப்புரத்தில் சாலையில் நடந்து சென்றவரை குடிபோதையில் தாக்கிய ரவுடிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம், கீழ்பெரும்பாக்கம் சேவியர் காலனியைச் சேர்ந்தவர் அந்தோணிசாமி, 46; இவர், நேற்று முன்தினம் இரவு, அருகே உள்ள பழைய சிந்தாமணி சாலை பகுதியில் உள்ள ஒரு கடைக்கு நடந்து சென்றார். அப்போது, அங்கு குடிபோதையின் நின்றிருந்த அதே பகுதியைச் சேர்ந்த ஜான்கென்னடி மகன் அபினேஷ் ரொசாரியோ, 21; பாக்கியராஜ் மகன் கோபிநாத், 20; ஆகியோர், அந்தோணிசாமியை வழிமறித்து, தகராறு செய்து, தாக்கினர்.
இதில், காயமடைந்த அவர், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்த புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து, ரவுடிகளான அபினேஷ் ரொசாரியோ, கோபிநாத் ஆகியோரை கைது செய்தனர்.
